பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

_

அறிந்தார். ஆன்த்ராக்ஸ் நோயைக் குணப்படுத்து வது எப்படி என்று யோசித்தது போலவே, அங்கக் கோழி நோயைக் குணப்படுத்துவதும் எப்படி என்று யோசிக்கலானர்.

எந்தக் கிருமியும் கனக்குரிய உணவு நம்முடைய உடம்பில் இருந்தால்தான் அதில் உயிரோடிருக்க முடியும். அதல்ை உடம்பில் அதற்கு உணவு கிடைக் காமல் செய்துவிட்டால் அது இறந்துபோகும், காம் பிழைத்துக் கொள்வோம். ஆனல் அநேகமாக எல்லா உடம்பிலும் அவ்விதமான உ ன வு க ள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனல் நோய்க் கிருமிகள் உடம்பினுள் புகுந்ததும் அவற் றிற்கு அந்த உணவு கிடையாமல் செய்வது எப்படி? அந்த நோய்க் கிருமிகளைக் காற்றில் - ) T வைத்தால் அவைகளின் விஷ பலம் குறைந்து போகும். அப்படி விஷபலம் குறைந்த கிருமிகளை உடம்புக்குள் அனுப்பினல் அவைகள் தங்களுக் குரிய உணவைச் சாப்பிட்டுவிடும், ஆல்ை முழு விஷபலம் இல்லாத கால் நம்முடைய உயிருக்கு அபாயம் உண்டாக்கா. அங் தவிதமாக உடம்பில் கிருமிகளுக்குரிய உணவுகள் போய் விடுவதால், உடம்பினுள் புகுந்த முழு விஷ பல முள்ள கிருமி கள் உணவு கிடையாமல் இறந்து விடுகின்றன. இது தான் பாஸ்ட்டியர் பலவிதமான ஆராய்ச்சி களின் பயனுய்க் கண்ட சிகிச்சை.

இந்த முறையை அனுஷ்டித்துக் கோழிகளுக்கு ஏற்பட்டிருக்க கொடிய நோயை அறவே ஒழித்துக் கொடுத்தார். அதல்ை கோழிவளர்ப்போர் இருபது J.26