பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லூயி பாஸ்டியர்

அதோடு அறிஞர்கள் அவருடைய வெறிநாய் சிகிச்சை முறையை விரிவாகச் செய்ய அனுகூலமா யிருக்கும் பொருட்டு, 1888-ம் வருஷத்தில், அவரு டையபெயரால் ஒரு சிகிச்சைசாலை,அமைக்க முயன் முரர்கள். அதற்காக ருஷியச் சக்கரவர்த்தி நாலா யிரம் பவுன் அனுப்பிவைத்தார். அனமதேயமாக ஒருவர் பத்துலட்சம் பவுன் எழுதிக்கொடுத்தார். அந்தப் பாஸ்ட்டியர் சிகிச்சைசாலை இப்பொழுது சகலதேசத்து வைத்தியர்களும் சக்தித்து அறிவு பெற்றுப்போகும் ஆலயமாக இருந்து வருகிறது.

1892-ம் வருஷத்தில அவருடைய எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவைப் பாரிஸ் நகரில் சகல தேசத்து அறிஞர்களும் கூடி வெகு விமரிசையா கக் கொண்டாடினர்கள். அப்பொழுது வீற்றிருந்த பெருஞ்சபையில் ஆங்கில ரணவைத்திய கிபுணர் லிஸ்ட்டர் பிரபு வைத்தியமும் ரணவைத்தியமும் பாஸ்ட்டியருடைய ஆராய்ச்சிகள் மூலம் அடைக் அள்ள அளவிடமுடியாத தன்மைகளைப்பற்றி விஸ் தாரமாகக் கூறிப்புகழ்ந்தார். அந்தப் புகழ்மாலை யின் இறுதியில் அவர் பாஸ்ட்டியர் உட்கார்க் திருக்க இடம் சென்று அவரைக்கட்டித்தழுவினர். அகன்பின் பாஸ்ட்டியர் தம்முடைய கடைசி நாட்களை வில்லினவ் என்னும் கிராமத்தில் கழித்து வந்தார். அங்கும் அந்த வயோதிக பருவத்திலும் அவர் சும்மாயிருக்கவில்லை; ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டிருந்தார். அவருக்கு முன்போல வேலை செய்ய முடியவில்லை. அதை கினைத்து அடிக்கடி 133