பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஸார்போர்ன் ஆராய்ச்சி சாலைக்குப்போய் விஞ் ஞானம் கற்றுவந்தார்.

அவ்விதமாக ஐந்தாறு வருஷங்கள் கழிந்தன. அப்பொழுது அந்தநகரத்தின் விஞ்ஞானப் பாட சாலையில் ஆசிரியராயிருந்த பீயர் கூரி என்பவ ருடைய பரிச்சயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் அவர்கள் இருவர்க்கும் விஞ்ஞானத்திடம் இருந்த விசேஷ அன்பேயாகும். அங் த ப் பரிச்சயம் நாளுக்குகாள் அதிகமாக வளர்த்து காதலாக மாறி விட்டது. ஆகவே அவர்கள் இருவரும் 1895-ம் வருஷத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஆ ல்ை அப்பொழுதும் அம்மையாருடைய தரித்திரம் ஒழிந்துவிடவில்லை. பீயர் கூரிக்குச் சொற்ப சம்பளம்தான். அதல்ை அதிகக் கஷ்டத் தோடுதான் அவர்கள் காலட்சேபம் நடத்தினர் கள். அவர்களுக்கு வீட்டைக் கவனித்துக்கொள்ள வேலைக்காரி கிடையாது. அம்மையார் சமையல் செய்வார். அவருடைய கணவர் சலவை செய்வார், வீடு பெருக்குவார், சகல உதவிகளையும் செய்வார்.

அவ்விதமாக இருவரும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஆராய்ச்சி சாலைக்குப் போவார்கள். அங்கே அம்மையார் தம்முடைய கணவர் செய்யும் ஆராய்ச்சிகளுக்ரு உதவி செய்வதோடு, ஆசிரியப் பதவிக்குரிய பரீட்சைக்கும் படித்துவந்தார். அப் படிப் படித்துக் கல்யாணமான வருஷத்திலேயே அந்தப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறினர். 142