பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

மூடியிருந்தபடியால், அந்த ஒளி குழாய்க் கு வெளியே வீச மார்க்கமில்லை. ஆயினும் அடுத்த மூலையிலிருந்த மஞ்சள் அட்டை அதிகப் பிரகாச மாக ஜ்வலிக்கக் கண்டார். ஆதலால் குழாயிலுண் டான ஒளியே கறுப்புக்கடுதாசியைத் துளைத்துக் கொண்டு அட்டையிடம் சென்றிருக்க வேண்டு மென்று தீர்மானித்தார். அதுவரை யாரும் கறுப்பு வஸ்து வழியாகச் செல்லக்கூடிய ஒளியைக் கண் டதுமில்லை, கேட்டதுமில்லை. ஆதலால் அதற்கு என்ன பெயரிடுவதென்று யோசித்தார். அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. அதனல் கிச்சயமாகக் கூறமுடியாதவைகளை (x) எக்ஸ் என்னும் எழுத் தால் குறிக்கும் ஐரோப்பிய சம்பிரதாயத்தை அனுசரித்து, அந்த ஒளிக்கு “எக்ஸ்-ரே (x-ray} அதாவது இதுவென்று கூற இயலாத ஒளி என்று நாமகரணம் செய்தார், ஆயினும் விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடித்த அறிஞர் பெயரால் ராண்ட் ஜன் ஒளி என்றும் கூறுவார்கள்.

1897-ம் வருஷத்தில் பெக்கால் என்னும் பிரஞ்சு அறிஞர் ஒரு இருட்டறையில் யுரேனியம் என்னும் வஸ்துவை வைத்திருந்தார். அதே அறையில் சில போட்டோ எடுக்கும் பிளேட்டுகளும் கறுப்புக் கடு தாசியில் பொதிந்து வைக்கப்பட்டிருந்தன. அங் தப் பிளேட்டுக்களை ஒருநாள் எடுத்துப் பார்த்த பொழுது அவைகள் மாறுதல் அடைந்திருந்தன. அந்த மாறுதல் உண்டாவதற்கு அவற்றின் மீது ஏதேனும் ஒளி பட்டிருக்கவேண்டும். ஆனல் அந்த 144