பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி அகன் பின் அதே வருஷம் டிஸம்பர் மாதத் தில் போலோனியம் காணப்பட்ட தார் எண் ணெய்க் கட்டியில் அதை விட அதிகச் சக்தி வாய்க்க வேறொரு வஸ்து இருப்பதாக கூறினர். அப்படி வேறொரு வஸ்து இருக் கால் அதை வேரு கப் பிரித்து எடுப்பது எப்படி ? அதற்குப் போது மான பொருளும் சாதனங்களும் வேண்டுமே, அதற் குக் கடரித் தம்பதிகள் என் செய்வர் ?

யுரேனியம் காணப்படும் தார் எண்ணெய்க் கட்டி அதிக விலையுள்ளது. அதை வாங்க அவர் களால் முடியாது. ஆல்ை ஆஸ்திரியா தேசத்தில் கண்ணுடி செய்வதற்காகத் தார் எண்ணெய்க் கட்டி யிலிருந்து யுரேனிய வஸ்துக்களை எடுத்துக்கொண்டு எஞ்சியதை வீணே போட்டு வந்தார்கள். அங்தக் கழிவுக்கு அதிக விலையில்லை. அது போதும் கூரித் தம்பதிகட்கு. அதில் ஒரு டன் அளவு ஆஸ்திரியா அரசாங்கத்திடமிருந்து பெற்றார்கள். ஆராய்ச்சி செய்வதற்கு அவர்களுடைய விஞ்ஞானப் பாடசா லைத் தோட்டத்திலிருந்த ஒரு பழைய கொட்டகை கிடைத்தது. அது மழை காலத்தில் ஒழுகிற்று, வெயிற் காலத்தில் வேர்த்துக் கொட்டிற்று. பனிக் காலத்தில் தாங்கமுடியாத குளிராய் இருந்தது. ஆயினும் ஆராய்ச்சியில் இருந்த ஆர்வத்தால் அவர் கள் அடிக்கடி பல நாட்கள் வீட்டுக்குப் போகாம அலும் அருமந்தக் குழந்தையைக் பார்க்காமலும் அந்தக் கொட்டகையிலேயே தங்கியிருந்தார்கள். அப்படியே வீட்டுக்குப் போனலும் அதி சிக்கிரத் தில் திரும்பி வந்து விடுவார்கள்.

147