பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அவருடைய முதற் பிரசங்கத்தைக் கேட்க ஆசிரியர்களும் மாணவர்களும் பிரசங்க மண்டபத் திலும்வெளியிலும் ஆயிரக்கணக்காகக் கூடியிருந்த னர். புதிய ஆசிரியர் முக்தியவர்க்குப் புகழ்மாலை சூட்டிப் பிரசங்கத்தை ஆரம்பிப்பது சம்பிரதாயம். ஆல்ை அம்மையார் அப்படி எதுவும் செய்யாமல் முக்திய ஆசிரியரான தம்முடைய கணவர் உயிருட னிருந்தால் எந்த விஷயத்தை எந்த வாக்கியத் தைக் கூறி ஆரம்பித்திருப்பாரோ அதே வாக்கி யத்தைக் கூறிப் பிரசங்கம் செய்ய ஆரம்பித் தார். அதைக் கண்டதும் எல்லோருடைய கண்க வளிலும் நீர் நிறைந்துவிட்டது. அம்மையார் துக் கத்துக்கு இடம் கொடாமல் தைரியமாக கின்று பிரசங்கத்தைச் செய்து முடித்தார்.

அதன் பிறகு அயல்நாட்டு விஞ்ஞானக் கழகங் கள் எல்லாம் அவருக்குப் பட்டங்களும் கெளரவங் களும் வழங்குவதில் போட்டி போடலாயின. ஆனல் பிரஞ்சுக் கழகமோ அவரை ஒரு அங்கத்தினரா கக்கூடச் சேர்த்துக்கொள்ளாமலிருந்து விட்டது. தீர்க்கத்தரிசிகள் தம்முடைய சொந்த தேசத்தில் கெளரவிக்கப்படார் என்பது உண்மைதான்.

1911ம் வருஷத்தில் ஸ்வீடிஷ் விஞ்ஞானக் கழ கத்தார் அவருக்கு ரவலாயன நோபல் பரிசை அளித்தார்கள். இரண்டுமுறை நோபல் பரிசுபெற் றவர் இவர் ஒருவரே.

அதன்பின் சார்போர்ன் சர்வகலாசாலையார் பாஸ்டியர் ஆராய்ச்சிசாலையுடன் ேச ர் ங் து 162