பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

‘ரேடியோ ஆராய்ச்சிசாலை” ஒன்று அமைத்து அதற்குக் கடரி தேவியாரைத் தலைவியாக்கினர். அப்பொழுது அம்மையார் தாமும் தம்முடைய கணவரும் நான்கு வருஷகாலம் படாத பாடுபட்டு 10 டன் தார் எண்ணெய்க் கட்டியிலிருந்து பிரித் தெடுத்ததும் இருபதாயிரம் பவுண் விலை பெறக் கூடியதுமான ஒரு கிராம் ாேடியத்தைத் தம் முடைய குடும்பத்தார் யோசனையையும் கேளாமல் அ ங் த ஆராய்ச்சிசாலைக்கு நன்கொடையாக அளித்தார். அந்த ஆராய்ச்சி சாலையே அவ ருடைய இறுதிக்காலம்வரை அவருடைய ஜீவநாடி யாக இருந்து வந்தது.

1914ம் வருஷத்தில் பிரான்ஸ்-க்கும் ஜெர்ம னிக்கும் யுத்தம் ஆரம்பமானபொழுது தம்முடைய ஸ்வீகாரத் தாய்நாட்டிற்குச் சேவைசெய்ய எண் ணங்கொண்டார். போரில் குண்டுபட்ட வீரர்க ளின் உடம்பில் குண்டு தங்கியுள்ள இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக ரேடிய ஆஸ்பத்திரிகள் அமைக்க விரும்பினர். ஆராய்ச்சி சாலைகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் சென்று கிடைக்கக்கூடிய எக்ஸ்-ரே கருவிகளை யெல்லாம் பெற்று பாரிஸ் நகரத் தருகிலிருந்த வைத்தியசாலைகளுக்கு வழங் கினர்.

அதோடு பிரஞ்சுப் பெண் மக்கள் கழகத்தார் வசூலித்துத் தந்த பணத்தைக்கொண்டு ரேடிய சிகிச்சை வண்டி’ ஒன்று தயார் செய்து போர்க் களத்துக்கு அனுப்பிவைத்தார். இ று தி யி ல்

I65