பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

இருபது கார்கள் வேலை செய்தன. அவற்றுள் ஒன் றை அம்மையாரே போர்க்களச்சேவைக்காக ஒட் டிச் சென்றுகொண்டிருந்தார். தேகச் சிரமத்தை யும் எக்ஸ்-ரேயால் உண்டாகக்கூடிய தீங்கையும் யுத்த களத்தில் ஏற்படக்கூடிய பிரான அபாயத் தையும் பொருட்படுத்தாமல் சேவை ஒன்றையே பிரதானமாக எண்ணி இடைவிடாது உழைத்து வாதாா.

1920ம் வருஷத்தில் அமெரிக்கப் பெண்மணி கள் லட்சம் டாலர் விலையுள்ள ஒரு கிராம் ரேடி யத்தை வாங்கி அம்மையார்க்குப் பரிசாக வழங்க விரும்பி அவரைத் தம் நாட்டுக்கு அழைக் கார்கள். அம்மையார் 54 வயதாய்விட்டபோதிலும் அந்தப் பெண்களின் போன்பை எண்ணி அங்த நாட்டுக் குச் சென்றாரர். அங்கே அவர் பெற்ற பெருமையும் மரியாதையும் அமோகமாயிருந்தன. அம்மையா ருடைய சுயநலமின்மையும் அறிவைப் பெருக்கும் ஆர்வமும் சேவை செய்யும் வண்மையும் அங்க காட் டாரை வசீகரப்படுத்திவிட்டன. ஆல்ை அவர் அவர்களுடைய ஏராளமான வரவேற்புக்களையும் விருந்துகளையும் தாங்கமுடியாமல் சீக்கிரமாகத் தம் முடைய நாட்டுக்குத் திரும்பினர்.

அவருக்கு வேறெதிலும் ஈடுபடாமல் ஆராய்ச்சி செய்வதிலேயே அதிகமான ஆசை. ஆனல் வய தானபோதிலும் அயல் இடங்கட்குப் போய்வந்தால் தாம் விரும்பும் பல பொதுநலக் காரியங்கள் நிறை வேறும் என்று கண்டு அவ்விதமே செய்துவந்தார்.

164