பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

எண்ணினர். பிரசங்கங்களைக் கேட்டார், அவைக ளுக்குக் குறிப்பு எழுதிக்கொண்டார். வீட்டில் போய் விரிவாகப் பிரசங்கங்களாக எழுதினர். தேவையான படங்களும் வரைந்தார். புஸ்தகம் போல் பைண்ட் செய்து எடுத்துக்கொண்டு டேவி யின் வீடு சேர்ந்தார். அதையும் அத்துடன் ஒரு கடிதத்தையும் வாயில் காப்போனிடம் கொடுத்து டேவியிடம் கருமாறு வேண்டிக்கொண்டார். அங் தக் கடிதத்தில் தாம் புஸ்தக பைண்ட் வேலையை விட்டு விட்டு விஞ்ஞான வேலை செய்ய விரும்புவ தாக எழுதியிருந்தார். வாயிற் காவலர் கொடுத்து விட்டதாக வந்து கூறினர். ஆனல் யாதொரு பதி அலும் கிடைக்கவில்லை. ஆயினும் மைக்கேல் எவ் விதச் சோர்வும் அடையாமல முன்போலவே மாலை கேரங்களில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து வந்தார்.

அப்படி கடந்து வரும்பொழுது டேவி ரஸா யனப் பரிசோதனை ஒன்று செய்ததன் காரண மாகக் கண்ணில் ஒரு சிறு நோய் உண்டாயிற்று. அந்தச்சமயம் டேவி மைக்கேலைப் புஸ்தகங்கள் பைண்டு செய்யாத ஒய்வு நேரங்களில் வந்து தமக் காக எழுதவேண்டியவைகளை எழுதுமாறு சொன் ர்ை. ஆனல் மைக்கேலுக்கோ அவரிடத்திலேயே தங்கி வேலைசெய்யவேண்டும் என்ற ஆசை அதிகமா யிருக்கது. அதைக் குறித்து அவருக்கு எழுத வும் செய்தார்.

அதற்கு டேவி ஏதேனும் வேலை காலியானல் சேர்த்துக்கொள்வதாகப் பதில் எழுதினர். அப் 172