பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

காலத்துக்குள் நல்லவிதமாக எல்லோரும் மெச்சும் படியாக விஞ்ஞானப் பிரசங்கம் செய்யக்கூடிய ஆற்றலை உண்டாக்கிக்கொண்டார்.

அவருக்குச் சோம்பல் என்பது அணுவளவு கூடப் பிடியாது. மனிதனுடைய சிறப்பெல்லாம் விடா முயற்சியையே பொறுத்தது என்று அடிக் கடி சொல்லுவார். அத்துடன் அவருடைய ஆசை எது என்பது அவர் அந்தக்காலத்தில் (26 வது வய தில்) தம்முடைய நண்பருக்கு எழுதிய கடிதமொன் றில் தெளிவாக விளங்குகின்றது.

1 செடிகள் முளைக்கின்றன-வளர்கின்றனபட்டுப்போகின்றன. அது போலவே மிருகங்களும் பிறந்து வளர்ந்து மடிந்து போகின்றன. செடி களும் மிருகங்களும் தங்கள் இனத்தின் அபிவிர்த் திக்கு எதுவும் செய்வதில்லை. மனிதன் மட்டுக்தான் உலகத்தில் இருக்க விஷ்யத்தை ஞாபகப் படுத்தும்படியான கற் செயல்களைச் செய்து விட்டு இறக்கின்றன். எவன் உலகத்தில் காணப்படும் அறிவையும் அறத்தையும் அணுவள வேனும் பெருக்குகிருனே அவனே மனிதவைான்.’ H

ஆகவே மனித ஜாதி தம்மை மறந்து விடாத படி மகத்தான காரியங்களைச் செய்து புகழுடம்பு பெறுவதே பாரடேயின் தனிப் பெரும் லட்சியம். அந்த நோக்கத்துடனேயே அவர் இடை விடாமல் தமக்குத்தாமே கல்வி கற்பித்து வந்தார். டேவி யுடன் சேர்ந்து விஞ்ஞான ஆராய்ச்சிகளைக் கவ னித்து வந்ததோடு தாமாகவும் பல ஆராய்ச்சிகள் 178