பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

சாட்கள் போன்ற ஒருநாளாகவே இருக்க வேண்டும் என்று யாதொரு தடபுடலுமின்றி அநேக நெருங் கிய பங்துக்களைக் கூட அழையாமல் வெகு சாதா ாணமான முறையிலேயே நடத்திக் கொண்டார். அவர் மணந்து கொண்டபோதிலும் அவருடைய மனம் எப்பொழுதும்விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே ஆழ்ந்து போயிருந்தது. அவர் மணம் செய்து கொள்வதற்கு இரண்டொரு மாதங்களுக்குமுன் தம் முடைய காதலிக்கு எழுதிய கடிதம் ஒன்றில், * உனக்கு எத்தனையோ எழுத விரும்புகின்றேன். ஆனல் உன்னைப் பற்றிச் சிங்திக்கும் பொழுதே ஐம்பது ஆராய்ச்சி விஷயங்கள் என் கண் முன் தோன்றி என்னை முட்டாளாக்கிக் கொண்டிருக் கின்றன’’-என்று எழுதினர்.

ஆயினும் ஸாரா அம்மையாரும் அவருக்கு வாழ் நாள் முழுவதும் அரும் பெரும் வாழ்க்கைத் துணே வியா ராகவே இருந்து வந்தார்.

அதன்பின் 1824ம் வருஷத்தில் ஆங்கில விஞ் ஞானி அடையக்கூடிய தலைசிறந்த கெளரவத்தைப் பெற்றார். அதுதான் ‘ராயல் சொஸைட்டி'யின் அங்கத்தினர் ஸ்தானம். அதுவும் அங்தப்பதவியை ஒருவர் 39 வயதிலேயே பெற்று விடுவது என்பது மிகவும் அபூர்வமான காரியமாகும். அப்படிப் பெற்றவரும் பாடசாலையில் புஸ்தகம் படியாமல் பைண்டரிடம் பைண்ட் வேலை செய்து வந்த ஒரு வர் என்றால் அவருடைய விசேஷத்திறமையை விய வாதிருக்க யாராலும் இயலுமோ?. I80