பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அடைந்தது. டேவியிடம் வந்து சேர்ந்த நாளிலி ருந்து 18 வருஷங்கள் சென்று விட்டன. இவ்வி தம் 1880-ம் வருஷத்திலேயே பூரணமான விஞ் ஞான வளர்ச்சி பெற்றவராக ஆனர். i

அவர் புஸ்தகங்கள் பைண்ட் செய்துகொண் டிருந்த காலத்திலேயே மின்சார சக்தியை ஆராய் வதில் கருத்துடையவராக இருந்தார் என்பதை அறிந்தோம். டேவியும் அதில் பல ஆராய்ச்சிக ளைச் செய்து இறுதியாக மின் சார சக்தியின் உதவி யால் பொட்டாசியம்’ என்னும் தனி வஸ்துவைக் கண்டுபிடித்துப் பெரும் புகழ் படைத்துக்கொண் டார். இதல்ை பாரடேயும் அங் த மின்சார சக்தி ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் உடையவராக இருந்தார்.

நாம் மின்சாரம் என்று சொல்லுவதற்கு ஆங் கிலத்தில் எலக்டிரிஸிட்டி’ என்று பெயர். அங் தப் பெயர் வரக் காரணம் என்ன ? இரண்டாயி ரத்து ஐநூறு வருஷங்களுக்குமுன் கிரீஸ் தேசத் தில் தேல்ஸ் என்று ஒரு அறிஞர் இருந்தார். அவர் தம்முடைய நாட்டிலுள்ள ஒரு மரத்தின் பிசினை எடுத்துச் சூடு பிறக்கத் தேய்த்தார். அது இறகுகள் போன்ற சின்னஞ் சிறு வஸ்துக்களைத் தன்னிடம் இழுத்துப் பிடித்துக்கொள்வதைக் கண்டார். அதன்பின் இத்தாலி நாட்டிலிருந்த பிளினி என்பவர் பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் காங் தக் கல்லுக்கும் இந்த விதம் இழுத்துப் பிடிக் கக்கூடிய சக்தி யிருப்பதைக் கண்டார். ஆயினும் 182