பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடிே

சாமுண்டானது தவளையின் உடம்பினல் இல்லை என்றும் வெவ்வேறு விதமான இரண்டு லோகங்க ளின் சேர்க்கையினலேயே என்றும் கூறினர்.

ஒரு செப்புத் தகட்டை மேஜைமீது வைத்து அதன்மீது கங்தக திராவகத்தில் தோய்த்த ஒரு துணியை வைத்து அதன் மீது ஒரு துத்தநாகக் தகட்டை வைத்தார். அதன் பின் மறுபடியும் செப்புத்தகடு, கங் த கத் திராவகத்துணி, துத்த நாகத் தகடு என்று பல அடுக்குகள் அடுக்கிவைத் தார். இறுதியில் அடியிலுள்ள செப்புக் தகட்டுட அனும் மேலேயுள்ள துத்தநாகத் தகட்டுடனும் செப் புக்கம்பிகளைச் சேர்த்து வைத்தார். அதன்பின் அந்தக் கம்பிகளின் மறுமுனைகளே ஒட்டிவைத்துத் திடீரென்று பிரித்தார். அவ்வளவுதான், அப் பொழுது ஒரு நெருப்புப் பொறி தோன்றிற்று, மின்சாாசக்தி உண்டாக்கும் யங் கிரத்திலும் இவ்வி தமாகவே உண்டாகும். ஆகவே செப்புக் கம்பிக ளில் மின்சாாசக்தி ஒழுக ஆரம்பித்து விட்டதைக் கண்டார். இதுதான் உலகில் முதன் முதலாக ரஸாயன முறையில் மின்சார சக்தியை உண்டாக் கியதாகும். இந்த முறையைக் கையாண்டால் மின்சார சக்தியை எளிதாக உண்டாக்கவும் செய்ய லாம். இடைவிடாமல் கம்பிகளில் ஒடும்படியும் செய்யலாம். வெகுதூரம்வரைச் செல்லும்படியும் செய்யலாம். இந்த அற்புத முறையைக் கண்டு பிடித்த அறிஞர் வால்டாவை பாரடே டேவியுடன் ஐரோப்பியச் சுற்றுப் பிரயாணம் செய்த சமயத் 185