பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

தில் ரோமாபுரியில் சக்திக்கும்படியான பாக்கியத் தைப் பெற்றிருந்தார்.

இந்த வால்டா முறையினல் மின்சார சக்தியை உண்டாக்கித்தான் டேவி பொட்டாசியம், ஸோடி யம் என்ற தனி வஸ்துக்களைக் கண்டுபிடித்தார். இந்த விதமாக உண்டாககும் சக்தி கம்பிகளைச் சூடாக்குவதைக் கொண்டுதான் டேவி மின்சார விளக்கின் தத்துவத்தைக் கண்டு கூறினர். ஆத லால் பாரடேயும் இந்த சக்தியை ஆராய்வதில் பல வருஷங்களைச் செலவு செய்து வந்தார்.

அந்தக் காலத்தில் டென்மார்க் தேசத்தில் ஆர்ஸ்டெட் என்று ஒரு பெரிய விஞ்ஞானி யிருங் தார். அவர் காங் த சக்திபோலவே மின்சார சக்தி யும் இழுக்கும் தன்மையுடையதாக இருப்பதால் காந்தத்துக்கும் மின் சாரத்துக்கும் ஏதேனும் சம் பந்தம் இருக்குமோ என்று சந்தேகித்து ஆராய ஆரம்பித்தார். நீங்கள் வடக்குத் திசையைக் காட் டும் காம்பஸ்’ ஊசியைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் காந்த ஊசி வடக்கு நோக்கி கிற்கும்பொ ழுது ஆர்ஸ்டெட் அறிஞர் மின்சார சக்தி ஒடுகின்ற கம்பியை அந்தக் கம்பியின் மேலே குறுக்காகப் பிடித்தார். அப்பொழுது காந்த ஊசி முன்போ லவே கின்றுகொண்டிருந்தது. எவ்வித சலனமும் காணப்படவில்லை. அதன் பின் அவர் மின்சாரக் கம்பியைக் காந்த ஊசியின் கீழ் பக்கத்தில் பிடிக் தார். அப்பொழுதும் அப்படியே தான் காணப் பட்டது. ஆயினும் மனம் சோர்ந்துபோகாமல் 186