பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

விரைவாகச் சுழற்றுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை. அங்க வேலையைக் கூட இப்பொழுது நீர்வீழ்ச்சிகளைக்கொண்டே செய்வ தால் மிகக் குறைந்த செலவில் மிக அதிகமான மின்சார சக்தியை உற்பத்திசெய்துவிட முடிகின் றது. இந்த விதமாக உற்பத்தியாகும் மின்சார சக்தியைக்கொண்டு உலகத்தில் நடைபெறும் காரி யங்கள் இத்தனை என்றாே இவை என்றாே எடுத்து எழுதுவது இயலாத காரியம். அதல்ை தான் அறிஞர்கள் பாரடேயை மனித ஜாதிக்குச் சேவைசெய்த விஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகக் கொண்டாடுகிருரர்கள்.

ஆயினும் பாரடே இப்படிக் காந்தத்தின் மூலம் மின்சாரத்தை உற்பத்திசெய்யும் தந்திரத் தைக் கண்டுபிடித்துக் கூறிய காலத்தில் அநேகர் முதலில் அதைப் பிரமாதமான விஷயமாகக் கருத வில்லை. அப்பொழுது இங்கிலாந்தில் பிரதம மங் திரியாக இருந்த க்ளாட்ஸ்டன் என்னும் மேதாவி பாரடேயின் ஆராய்ச்சிசாலைக்குச் சென்றிருந்த பொழுது பாரடே காம் கண்டுபிடித்த விஷயத்தை அவருக்கு விளக்கிச் சொன்னர். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதம மந்திரி இறுதியில் -"அது எல்லாம் சரிதான், ஆல்ை என்னலாபம் என்று

தெரியவில்ல’ என்.று கேட்டார்.

அதற்குப் பாரடே “அப்படியா கினைக்கிறீர் கள், இன்னும் கொஞ்சகாலத்தில் நீங்கள் அதற் கும் வரிபோட்டுவிடுவீர்களே”என்று பதில் உரைத் 191