பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஹம்ப்ரி டேவி ஆயினும் அந்தக்காலத்தில் ஆங்கில நாட்டில் விஞ்ஞானப் பண்டிதர் மட்டுமின்றி மற்றவர்களுங் கூட விஞ்ஞான சாஸ்திரத்தை அறிவதில் அக்கரை யுடையவர்களா யிருந்தார்கள். சாதாரணமான ஜனங்கள் கூட உஷ்ணம் என்பது யாது ? மின் சாரத்தால் யாது பயன் ? என்பன போன்ற கேள்வி களைக் குறித்து சர்ச்சை செய்ய ஆரம்பித்தார்கள் : கனவங்கர்களும் நாகரீகத்தில் மூழ்கிய பெண்களுங் கூட இது விஷயத்தில் ஆவலுடையவர்களானர் கள். இந்த விதமாக எல்லோரும் காட்டிய அக்க ரைக்குக் காரணம் யாது ?

ஹம்ப்ரி டேவி என்று ஒரு விஞ்ஞானி இருக் தார். அவர் தினங்தோறும் ராயல் இன் ஸ்டிட்யூட் என்ற சங்கத்தில் விஞ்ஞானப் பிரசங்கங்கள் செய்து வந்தார். அவர் கஷ்டமான விஷயங்களே எளிதாக அர்த்தமாகக் கூடிய விதத்தில் கூறி சோதனைகள் செய்து காட்டி விளக்கியதுதான், பலாப்பழத்தில் ஈக்கள் மொய்ப்பதுபோல விஞ்ஞா னத்தின்பால் ஜனங்களைச் செல்லுமாறு செய்தது. அங்கக் காலத்தில் ஆங்கிலநாட்டில் இருந்த மஹா பெரிய கவிஞர்களில் கோல்ரிட்ஜ் என்பவ ரும் ஒருவர். கவிஞர்களே உவமைகளே அதிகமா கக் கையாளுகிறவர்கள். இன்னும் அதிகமான உவமைகளைத் தெரிந்துகொள்வதற்காகவே தாம் டேவியின் பிரசங்கங்களைக் கேட்கப்போவதாகக் கோல்ரிட்ஜ் த ம து நண்பர்களிடம் அடிக்கடி

சொன்னர்.

190