பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

இந்த விதமாக டேவி நகைவாயு சம்பந்தமாகத் தைரியமாக நிகழ்த்திய சோதனைகளும் ஆராய்ச்சி களும் அவருடைய பெயரை விஞ்ஞானிகள் அனை வர்க்கும் தெரியும்படியாகச் செய்தன. அவர் வைத்தியர்க்கும் விஞ்ஞானிக்கும் உதவிசெய்பவ ாாக இருந்தவர் இப்போது விஞ்ஞானியாகவே ஆகிவிட்டார்.

அங் தக்காலத்தில் விஞ்ஞான உலகத்தில் அதி கக் கீர்த்திவாய்ந்தவர்களாக இருந்த விஞ்ஞானிக ளில் ரம்போர்டு பிரபு என்பவரும் ஒருவர். அவர் 1800ம் வருஷத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதற்கான வசதிகள் செய்துகொடுப்பதற்காக வும் சாதாரண ஜனங்களுக்கு விஞ்ஞானம் கற்றுக் கொடுப்பதற்காகவும் ராயல் இன ஸ்டிடியூட் என் அனும் விஞ்ஞான சங்கத்தை ஸ்தாபித்தார்.

அவர் டேவியைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்த படியால் அவரைத் தமது சங்கத்தில் ரஸாயனப் பகு திக்கு அத்யட்சகராக நியமிக்க விரும்புவதாக டேவிக்குக் கடிதமெழுதினர். இந்த வேலையை ஏற்றுக்கொண்டால் ஆராய்ச்சிசெய்ய அதிகநேரம் கிடைக்கும் என்று எண்ணி அவர் அதை வெகு சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வதாக பதில் கடித மெழுதினர்.

ஆல்ை டேவியின் தோற்றம் கவர்ச்சி உடைய தாக இருக்கவில்லை. அத்துடன் அவருக்கு வய தம் 2 தான் ஆகி இருந்தது. அதல்ை அவர் லண்டனுக்கு வந்து ரம்போர்டு பிரபுவிடம் சென்ற 204