பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலர் ஹம்ப்ரி டேவி

-

இக் கவிஷயங்களை எல்லாம் அறிந்ததும் டேவி அவற்றைப்பற்றி சிங்கிக்கலானர். அவரும் உரா யும் வஸ்துக்களைக் கொண்டேதான் ஆராய முடிவு செய்தார். ஆனல் ஆச்சரியத்திலும் ஆச்சரியம், அவர் உஷ்ணத்தைப்பற்றி ஆராயப் பனிக்கட்டி யையே உபயோகிக்க ஆரம்பித்தார். இரண்டு பணிக்கட்டிகளைத் தேய்த்தால் அவை உருகுவதைக் அண்டார். உஷ்ணங் தானே பனிக்கட்டியை உருக்க முடியும்? அப்படியால்ை உருக்குவதற்கு வேண்டிய உஷ்ணம் எங்கிருந்து வந்தது? அது பனிக்கட்டியி லிருந்தாவது அதைச் சுற்றியுள்ள காற்றிலிருந்தா வது அல்லது அந்தப் பனிக்கட்டிகள் உராய்வதி லிருந்தாவது வங் திருக்கவேண்டும். இந்த மூன்று வழிகளில வராமல் வேறு எங் த விதத்திலும் வராது.

பனிக்கட்டி குளிராயிருப்பதால். அதிலிருந்து வந்திருக்கமுடியாது. அப்படியால்ை அது காற்றி லிருந்து வந்திருக்குமா ? இதே கேள்வியை ரம் போர்டும் கேட்டுக்கொண்டு தம்முடைய சோதனை யைக் காற்றில் செய்யாமல் தண்ணிர்க்குள் செய். தார். தண்ணிருக்குள் வைத்துச் செய்தபொழுதும் உஷ்ணம் உண்டானதால் உஷ்ணம் காற்றிலிருந்து வரவில்லை என்று தீர்மானித்தார். அப்படியால்ை உஷ்ணம் தண்ணிரிலிருந்து வந்திருக்கலாமல்லவா என்.று டேவி யோசித்தார். அதனல் தண்ணிர் காற்று எதுவுமில்லாமல் சோதனைசெய்து பார்த் கால்தான் உண்மை விளங்கும் என்று எண்ணினர்.

அப்படியால்ை எந்த வஸ்தவுமில்லாமல் ஒரு இடத்தைக் காலிசெய்வது எப்படி? ஒரு பாட்டிவில்

14 209