பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

பொடியுமில்லாமலிருக்கலாம் ஜலமும் இல்லாம லிருக்கலாம், அப்படிப்பட்ட பாட்டிலைக் காலியாக யிருக்கிறதாகச் சொல்லுவது வழக்கம். ஆல்ை உண் மையில் அது காலியாக இருப்பதில்லை.அதில் காற்று கிறைந்திருக்கிறது. அந்தக் காற்றுமில்லாமலிருங் தால்தான் உண்மையாகவே அந்த பாட்டிலைக் காலி பாட்டில் என்று கூறமுடியும். ஆனல் காற்றில் லாமல் பாட்டிலைக் காலியாக்குவதெப்படி? காற்றில் லாமல் காலியாக்குவதற்காக விஞ்ஞானிகள் ஒரு யந்திரத்தைக் கண்டுபிடித்திருந்தார்கள். சைக்கிள், .ே மாட் டார் சக்கரத்திலுள்ள ரப்பர்க்குழாயில் காற்று அடைப்பதற்காக ஒரு பம்பு உண்டு. ஆல்ை விஞ்ஞானிகள் குழாயிலுள்ள காற்றை வெளியாக் குவதற்காக ஒரு பம்பு செய்திருந்தார்கள்.

இந்தக் கருவியைக் கொண்டு ஒரு பாத்திரத்தி லுள்ள காற்றை வெளியாக்கி அதைக் காலியாக் கிக்கொண்டு ஆராய்ச்சிசெய்யலாம் என்று டேவி எண்ணினர். ஆனல் அங்தப் பம்பைக்கொண்டு காற்றை வெளியாக்க எவ்வளவு முயன்றாலும் ஒர் சிறிய அளவு காற்று வெளியாகாமல் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆதலால் டேவி பரி பூரணமாகக் காற்றில்லாமல் செய்யும் மார்க்கத் தைக் கண்டுபிடிக்க முதலில் முயன்றார், கடைசி யாக அவர் கையாண்டமுறை மிக எளிது. ஆனல் பெரிய விஞ்ஞானிகள்தான் இந்த மாதிரி எளிய முறையைக் கண்டுபிடிக்க முடியும்.

அப்படி அவர் கண்டுபிடித்த முறை யாது? ஒரு காற்றிருக்கிறது, அதனுள் ஜலத்தை 210