பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

மின்சாரக் கம்பிகளைத் தண்ணிருககுள் நுழை த்து வைத்துக்கொண்டு, ஒரு முனையில் லே கிட் மஸை வைத்தபொழுது அது சிவப்பாக மாறிற்று. அதை எடுத்து மற்றமுனையில் வைத்தபொழுது அது மறுபடியும் நீலமாக மாறிவிட்டது. அதனல் ஆக்ஸிஜன் ஹைட்ருேஜன் என்னும் வாயுக்கள் உண்டானதுடன் ஒரு ஆஸிடும் ஒரு ஆல்கலியும் உண்டாயின.

காவன்டிஷ் என்பவர் இதற்கு முன்னதாகவே ஜலம் என்பது ஆக்ஸிஜன் ஹைட்ரோஜன் என் அனும் இரண்டு வாயுக்களால் மட்டும் உண்டான ஒரு வஸ்து என்று நிரூபித்திருந்தார். அப்படியால்ை ஆஸிடும் ஆல்கலியும் எங்கிருந்து வந்தன ?

இந்த விஷயத்தைத்தான் டேவி 1806ம் வரு வடித்தில் ஆராய ஆரம்பித்தார். ஆஸிடும் ஆல்கலியும் ஜலம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து உண்டாவதாகவே எண்ணினர். அப்படித் தான என்று சோதிப்பதற்காக வாலையில் வடித்த பரிசுத் தமான ஜலத்தைத் தங்கப்பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொண்டு பரிசோதனை செய்தார். அப் பொழுதும் ஆஸிடும் ஆல்கலியும் உண்டாயின. ஜலம் பரிசுத்தமாக இருந்ததால் இவை ஜலத்திலிருந்து உண்டாயிருக்க முடி யாது, தங்கப்பாத்திரத்தி லி ரு ங் து தா ன் உண்டாயிருக்கவேண்டுமென்று எண்ணினர்.

ஆயினும் அவர் விஞ்ஞானியாயிருக்தபடியால் அவருக்கு இன்னும் சந்தேகம் கிவர்த்தியாகவில்லை. 216 _