பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஹம்ப்ரி டேவி லிய இரும்பு வலைதான் தெரிகிறது. ஆலுைம் அபாயம் உண்டாவதில்லை. காரணம் யாது? கரி வாயு வலையைக்கடந்து தீச்சுடரிடம் சென்று எரியக் தான் செய்கிறது. ஆனல் அந்த உஷ்ணம் வலை யைத் தாக்குகின்றதே யன்றி வலைக்கு வெளியே வருவதில்லை. வலையானது உஷ்ணத்தை உடனுக் குடன் சிதறிப்போகும்படியாகச் செய்துவிடுகிறது. அதல்ை வெளியேயுள்ள கரிவாயு நெருப்புப்பற்றாம லிருந்துவிடுகிறது. என்ன ஆச்சரியம்? வலையானது ஒளியைப் போகவிட்டு, உஷ்ணத்தை வடிகட்டிப் பிடித்துக் கொள்ளுகிறது !

இங்த மகத்தான உதவியைச் செய்து உயிர்ப் பிச்சை தந்த டேவிக்கு சுரங்கத்தார்கள் பகிரங்க மாக நன்றி தெரிவித்ததோடு அதற்கு அறிகுறி யாக ஒரு வெள்ளித்தட்டும் பரிசளித்தார்கள். அதன்பின் சில வருடங்கள் சென்றதும் அவரை அறிஞர்கள் ராயல் சொஸைட்டியின் தலைவராகத் தெரிந்தெடுத்துத் தங்களை கெளரவித்துக் கொண் டார்கள்.

அவருடைய நண்பர்களில் ஒருவர், அங்த விளக்கை வேறுயாரும் செய்யக்கடடாது என்று அரசாங்கத்தில் பதிவு செய்துகொண்டு அந்தமாதிரி விளக்குகளைச் செய்து விற்றால் அமோகமான செல்வம் கிடைக்குமென்று யோசனை கூறினர். ஆனல் டேவியா அதற்குச் சம்மதிப்பார்? உண்மை யான விஞ்ஞானிகள் யாருமே சம்மதிக்கமாட்டார் கள். ரேடியம் கண்டுபிடித்த கூரி அம்மையாரைப் போலவே இவரும்,

225