பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஜகதீஸ் சந்திர போஸ்

லோரும் பிரமித்துப் போனர்கள். இதென்ன, இவருடைய யந்திரத்துக்கும் அந்த மணிக்கும் எவ் வித இணைப்புமில்லையே, அப்படியிருக்க அது மணி அடித்ததன் காரணம் யாது என்று எண்ணினர் கள்.

அதன் பின் அவர் அடுத்த அறையிலுள்ள மேஜையின் மீது கனமான ஒரு பொருளே வைத்து விட்டு வந்து தம்முடைய யந்திரக்குமிழை அழுத்தி னர். ஆள் பிடித்துத் தள்ளியதுபோல அக்த வஸ்து தடாரென்று கீழே விழுந்தது.

இதைக் கண்டதும் அறிஞர்கள் ஆச்சரியப்பட் டார்கள். கையால் அடிக்கும் மணியையும் மின் சார சக்தியால் அடிக்கும் மணியையும் கண் டிருக்கிருரர்கள். ஆனல் மணி ஒரு அறையிலும் நாம் ஒரு அறையிலும் இருந்துகொண்டு மணி அடி என்றவுடன் மணி அடிப்பதுபோல் அடிப்பதைக் கண்டதில்லை. ஆசிரியர் அழுத்திய குமிழுக்கும் அடுத்த அறையிலிருந்த மணிக்கும் எவ்வித சம் பந்தமுமில்லை. இரண்டுக்கு மிடையில் காற்றுமட்டு மில்லை, சுவரும் கூடத் தடையாக கின்றுகொண் டிருந்தது.

நாம் ஏதேனும் ஒரு பொருளை நம் கையால் தள்ளலாம். அல்லது வேறு பொருளேக்கொண்டு தள்ளலாம். ஆனல் அதை எதைக்கொண்டும் தொடாமல், அதுவும் அடுத்த அறையில் அதைக் கண்கொண்டு கூடப் பாராமல் இருந்துகொண்டு தள்ளுவதென்றால் அது ஒரு அபூர்வமான அற்புதச் செயல் அன்றாே ? *

227