பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

சம்பளத்தில் மூன்றில் இரண்டுபங்கே இந்தியர்க் குக் கொடுத்து வந்தார்கள். போஸின் உத்தியோ கம் காயமாகாததால் அந்த மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்திலும் பாதிதான் போஸுக்குக் கொடுத்தார்கள். இப்படி ஐரோப்பியரைவிட இந்தி யரைத் தாழ்வாக கடத்துவது போஸுக்குப்பிடிக்க வில்லை. அதனால் அவர் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளாமலே வேலைபார்த்து வந்தார். இப்படி மூன்று வருஷங்கள் கழிந்தன. கல்லூரியின் தலைமை ஆசிரியரும் கல்வி டயரெக்டரும் போளின் திறமையையும் ஒழுக்கத்தையும் கண்டு அவருக்கு மிக நெருங்கிய நண்பர்களானர்கள். அதன் கார ணமாக போஸின் உத்தியோகம் காயமாயிற்று. மூன்று வருஷகாலத்துக்கும் முழு ச் சம்ப ள ம் கொடுக்கப்பட்டது.

போஸ் விஞ்ஞான ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனல் அவருடைய கலா சாலையில் அதற்குத்தக்க சோதனசாலை இல்லாமல் இருந்தது. ஆயினும் அவர் அதைர்யப்படாமல் உள்ள வசதிகளேக் கொண்டு ஊக்கமாக ஆராய்ச்சி கள் செய்துவந்தார்.

வெகுகாலத்துக்கு முன்னதாக கிளார்க் மாக்ஸ் வெல் என்பவர் மின்சார அலைகள் இருப்பதா கச் ஜோஸ்யம் கூறினர். அதை உண்மை என்று 1887ம் வருஷத்தில் ஹெர்ட்ஜ் என்பவர் கிரூபித் துக் காட்டினர். அதைக் கேட்டதும் விஞ்ஞானிகள் எல்லோரும் அதைக் குறித்து ஆராய்ச்சிகள் செய்ய 252