பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ராயல் ஸ்தாபனத்தார் தங்களுடைய சங்கத்துக்கு வந்து பிரசங்கம் செய்யுமாறு போஸை அழைத் தார்கள். இதுவும் மிகச் சிறந்த கெளரவமாகும்.

அதன்மேல் இந்திய அரசாங்கம் அவரை இங் கிலாந்துக்கு அனுப்பிவைத்தது. அவர் அங்கே பல அறிஞர்கள் முன்னிலையில் மின்சார அலை களைக் குறித்துப் பிரசங்கங்கள் நிகழ்த்தினர். பிரான்ஸ் தேசத்திலும் ஜெர்மனி தேசத்திலும் உள்ள அறிஞர்கள் அவரை அழைத்து பிரசங்கங் கள் செய்யச்செய்து புகழுரைகள் கூறினர்கள்.

அவர் 1897ம் வருஷத்தில் இந்தியாவுக்குக் திரும்பிவந்தார். அதன்பிறகும் அவர் மின்சார அலைகளைப் பற்றியே ஆராய்ச்சிசெய்து வந்தார். மின்சார அலைகள் உண்டாவதைக்கண்டு கூறுவ கற்காக ஸர் ஆலிவர் லாட்ஜ் என்னும் விஞ்ஞானி ஒரு கருவியை அமைத் திருந்தார். ஆனல் அந்தக் கருவியில் ஒரு பெரிய குறை காணப்பட்டது, அதை ஒரு தடவை உபயோகித்த பின் மறுபடியும் உபயோகிக்கவேண்டுமானல் அதைக் கையால் மெதுவாகக் கொட்டிவிடவேண்டும். அப்படிச் செய் தால்தான் அது மறுபடியும் வேலைசெய்யும். அந்த மாதிரி ஒவ்வொரு தடவையும் கொட்டவேண்டிய அவசியமில்லாத ஒரு கருவியை அமைக்க முயன்று போஸ் வெற்றிபெற்றார்.

சூரிய ஒளியை முக்கோணப் பளிங்கு வழியா கச் செல்லச் செய்தால், அந்த வெண்ணுெளி ஊதா முதல் சிவப்பு ஈருக ஏழுகிறக் கிரணங்களாகப் பிரிந்து விடுகின்றது. கண்ணுக்குத் தெரியும் ஏழு 234