பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஜகதீஸ் சந்திர போஸ் டைய சோதனைகளை நேரில் பார்ப்பதற்காக ‘ஒரு சாள் ஹொரேஸ் பிரெளன், ஹவுஸ் என்ற விஞ் ஞான நண்பர்களுடன் போஸ் ஆராய்ச்சி செய்ல மிடத்திற்கு வந்தார்.

செடியைத் தொட்டதும் அதற்குண்டாகும் உணர்ச்சியை ஒரு கருவி அற்புதமாகக் காட்டி யதை அவர்கள் கண்டார்கள். அவர்கள் “ஆகா இதென்ன ஆச்சரியம்’ என்று ஆனந்தக் கடக்கா டினர்கள். ஐயோ இதைக்கான ஹக்ஸ்லி இல்லா மல் போய்விட்டாரே என்று ஹவுஸ் என்பவர் வருங்தினர். அதன்பின் அவர்கள் ‘உங்கள் கட்டு ரையை ராயல் சொஸைட்டி பிரசுரிக்காமல்போல்ை போகட்டும். அதைத் தாவர நால் சங்கத்திற்குக் கொடுங்கள். காங்கள்தான் அதன் தலைவரும், காரியதரிசியும், நாங்கள் பிரசுரிக்கிருேம்,’ என்று சொன்னர்கள்.

அப்படியே போஸ் தம்முடைய கட்டுரையை அ வர் க ளு க் கு அனுப்பிவைத்தார். அவர்கள் அதைப் பெற்றபிறகு, அதே கட்டுரையை ஒரு எழுத்துக்கடட மாற்றமில்லாமல் 1901 நவம்பரில் வேறொருவர் வேறொரு சங்கத்தார்க்கு அனுப்பி யிருப்பதாக போஸுக்கு எழுதினர்கள்.

இதன் உண்மை என்ன? அப்படியால்ைபோஸ் வேறொருவர் எழுதிய கட்டுரையை அப்படியே பார்த்துக்காப்பிசெய்து இவர்களுக்கு அனுப்பிவிட் டாரா? இங்த விஷயம் போஸ்-க்கு மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கிற்று. இதை விசாரணை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப் 259