பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

= போஸ் ஐரோப்பாவில் திக்விஜயம் செய்து விட்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்குத் திரும்பி வந்து பம்பாயில் இறங்கியதும் அங்குள்ள இளைஞர் சங்கத்தார் அவருக்கு ஒரு உபசாரப் பத்திரம் வாசித்தளித்தார்கள். போஸ் அதற்குப் பதில் கூறியபொழுது சொன்னகாவது:- *

என்னிடம் ஒரு மாணவர் வந்தால் செய்யச் சொல்லும் வேலையை செய்யமுடியுமா என்று அவ ரிடம் கேட்பேன். செய்யமுயல்வேன் என்று அவர் சொல்வார். அது பணிவைக் காட்டாது. கோழைத் தனத்தைத்தான் காட்டும்.

ஆ ைல் செய்யவேண்டியதைத் .ெ த ரிங் து கொண்டு செய்வேன் என்று கூ றுவதே முறை. ஏதேனும் பிழை நேர்ந்தால் பிறரைக் குறைகூறு வதோ சக்தர்ப்பத்தைக் குறைகூறுவதோ தவறு. என்ன தடைகள் ஏற்பட்டாலும் அதை நீக்கிக் கொண்டு ஜயம் காண்பதே முறை இவ்விதமே தான் போஸும் தமது வாழ்நாளில் கடந்துவங் தார். அவர் முதல்முதலாக ஆசிரியர் பதவி பெற்ற பொழுது அவருடைய கல்லூரியில் ஆராய்ச்சிசாலை இல்லாமல் இருந்தது. ஆல்ை அவர் அதற்காக அதைரியப்படவுமில்லை. ஆராய் ச் சி செய்யாமல் இருந்து விடவுமில்லை. பின்னல் அவர் தாம் கண்ட உண்மைகளைக் வெளியிட்டபொழுது பல மான எதிர்ப்புக்கள் உண்டாயின. ஆனல் அவைகளை லட்சியம் செய்யாமல் இரவுபகலாக உழைத்து தம் முடைய சித் தாங்கத்தை எல்லோரையும் ஒப்புக் கொள்ளும் படி செய்தார். 252