பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர். ஸி. வி. ராமன்

1901-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் ஒருநாள் காலை 10 மணி. அந்தக் காலத்தில் கல்விவருஷம் ஜனவரிமாதத்தில் ஆரம்பமாகும். அதற்கு முக்திய வருஷத்தில் எப். ஏ. பரீட்சையில் தேறிய மாணவர் கள் பி. ஏ. வகுப்பில் படிப்பதற்காக சென்னை ராஜ தானி கல்லூரியில் வந்திருந்தார்கள். வகுப்பு ஆரம்ப மாகும் நேரத்தில் ஆங்கிலக் கவிதை கற்றுக்கொடுக் கும் ஆசிரியர் எலியட் என்பவர் பி. ஏ. வகுப் பறைக்கு வந்தார். வந்து உட்கார்ந்து மாணவர் க2ள நோக்கினர். -

சாதாரணமாக பி. ஏ. வகுப்பில் படிக்கவரும் மாணவர்கள் சிறு பையன்களாக இருக்கமாட்டார் கள். வாலிபர்களாக இருப்பார்கள். ஆனல் அக்த வகுப்பில் ஒரு சிறுபையன் காணப்பட்டான். அவ லுக்கு வயது பதின்மூன்றுதான். அந்த வயதுக் கேற்ற உயரங்கூட இல்லாமல் குட்டையாகவும் இருந்தான். அவனைக் கண்டதும் ஆசிரியர் எலியட் இந்தப் பையன் வகுப்புத்தெரியாமல் வந்து விட் டானே என்று எண்ணி அவனிடம் ‘நீ இந்த வகுப் பைச்சேர்ந்தவன?’ என்று கேட்டார்.

உடனே பையன் “ஆம், ஐயா! இந்த வகுப்புத் தான்’ என்று பதில் சொன்னன்.

‘உன் வயதென்ன?” “பதின் மூன்று” ‘எப். ஏ. பரீட்சைக்கு எங்கு படித்தாய்?” வால்டேரில் ஐயா!’

254