பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர். ஸி. வி. ராமன்

என்னும் ஸ்தாபனத்தை கிறுவினர். அதன் காரிய தரிசியாய் இருந்து இந்தியாவில் பல இடங்களுக் குச் சென்று விஞ்ஞான ஆராய்ச்சியின் அவசி யத்தை ஜனங்களுக்கு எடுத்துச்சொல்லி வந்தார். அவருடைய சேவையைமெச்சி கல்கத்தா சர்வ கலாசாலையார் விஞ்ஞான சிரோன்மணி என்னும் பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தினர்கள். 1924-ம் வருஷத்தில் இங்கிலாந்திலுள்ள பெரிய விஞ்ஞான ஸ்தாபனமாகிய ராயல் சங்கத்தார் அவரைத் தங்களோடு ஒரு அங்கத்தினராக சேர்த் துக்கொண்டார்கள். சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களுக்குத்தான் இந்த கெளரவம் அளிப்பது வழக்கம். அதன்பின் அதே வருஷத்தில் கானடா வில் உள்ள விஞ்ஞான சங்கம் அவரை அங்கு வந்த பிரசங்கம்செய்யும்படி வேண்டிக்கொண்டது. அவர் முதலில் இங்கிலாந்திற்குச் சென்று பெரிய விஞ் ஞானி ஆகிய கெல்வின் பிரபுவின் நூற்றாரண்டுவிழா வைபவத்தில் கலந்துகொண்டு பின்னர் கானடா

விற்குச் சென்றார்.

அங்கே முதல்நாள் ஒருமணிநேரம் பிரசங்கம் செய்தார். அது முடிந்து வெளியே வரும்பொழுது பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் ராமனிடம் வந்து ‘தங்களைக்கான மிகுந்த சந்தோஷம் அடைகின்றேன். தங்களுடன் நட்புக் கொள்ள விரும்புகின்றேன்’ என்று கூறினர். அவர்தான் ஆசிரியர் மில்லிகன் என்பவர். பெளதிக சாஸ்திர ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர். அமெரிக்க பெளதிகசாஸ்திரிகளில் தலைசிறந்தவர். 267