பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

திரும்பி வந்ததும் ஆராய்ச்சியில் ஆழ்ந்து போனர். ஒளி பல வஸ்துக்களின்மீது பட்டு பல விதமான கிறங்களுடன் தோன்றுவதைக் குறித்து தாம் 1921-ம் வருஷம் முதல் ஆராய்க்துவந்த விஷ யத்தை மறுபடியும் தொடர்ந்து ஆராயலானர். இறுதியில் 1928-ம் வருஷத்தில் அதன் உண் மையை ஐயம் திரிபறக் கண்டார். அதை இப் பொழுது விஞ்ஞானிகள் ராமன் பலன்’ என்று கூறுகிரு.ர்கள். =

ஊதா முதல் சிவப்பு ஈருக ஏழுகிறக் கதிர்கள் சேர்ந்தே வெண்ணிறமான சூரிய ஒளி உண்டா யிருக்கின்றது என்பதை கியூட்டன் என்பவர் கண்டு பிடித்தார். சூரிய ஒளியை பிரிஸம் என்னும் முக் கோண வடிவமான பளிங்கினூடே செல்லும்படி செய்தால் இந்த உண்மையைக காணலாம். சூரிய ஒளியைப்போலவே மற்ற ஒளிகளையும் ஆராய்வதற் காக விஞ்ஞானிகள் ஒரு கருவியை அமைத்திருக் கிருரர்கள். அதன் வழியாகப் பார்த்தால் எந்த ஒளியை ஆராய விரும்புகின்றாேமோ அந்த ஒளி கருவியிலுள்ள பிரிஸத்தின் வழியாகச் சென்று பல கிறங்களாகப்பிரிந்து தோன்றுவதைக் காணலாம்.

சூரிய ஒளியை அந்தக் கருவியின்மூலம் பார்க் தால் நிறங்கள் ஒருவிதமாகத் தோன்றும். ஆனல் சூரிய ஒளியை ராமன் ஜலத்தின்வழியாக செல்லும் படிசெய்து அதன்பின் அதைக் கருவியின் வழியா கப் பார்த்தார். அப்பொழுது அதுவேறுவிதமாகத் தோன்றிற்று. புதிய கிறங்கள் தோன்றின. ஒரு வேளை சில நிறங்கள் சிதறிப்போய் இப்படித் தோன்றுகிறதோ என்று சந்தேகப்பட்டார். 370