பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

பிடிக் துக் கூறிய கறுப்புப் பிரதேசங்களைப் பற்றி ஆண்டுதோறும் புதிது புதிதாகக் கண்டுபிடித்து வருகிருரர்கள்.

1615-ம் வருஷம் ஐந்தாவது பால் என்னும் பெயருடைய போ ப் ஆண்டவர் ஜாக்கிாதை என்று கலிலியோவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக் தார். அடுத்தவருஷத்தில் கிறிஸ்துவ மத வியாக் கியான கர்த்தாக்கள் அனைவரும் கூடி கலிலியோ வின் சித்தாந்தம் கிறிஸ்துவ மதத்துக்கு விரோக மானது என்று தீர்மானித்து அதை விட்டுவிடும்படி யும் வெளியில் கூரு திருக்கும்படியும் அவருக்குக் கட்டளே யிட்டார்கள்.

அவர்களுடைய ஆக்ஞையை மீறி கடந்தால் அநேக விதமான சித் திரவதைகள் கடத்தப்படும் என்பதை அவர் அறிவார். அதல்ை தம்முடைய சித்தாந்தத்தைப் பற்றி வெளியில் கூட ரு ம .ே ல

ஆராய்ச்சிசெய்து வந்தார்.

ஆயினும் அந்தக் கட்டளை பிறந்து பதினறு

வருஷங்கள் கழிந்தபின் 1632-ம் வ ரு ஷ த் தி ல் ‘இரண்டு பிரதானமான உலகங்களின் சம்பா வடினே’ என்னும் நூலே எழுதி வெளியிட்டார். அந்த நூலில் சமயப்பெரியார்கள் எதை வெளியிட லா கா து எ ன் று கட்டளையிட்டிருந்தார்களோ அதையே தெளிவாகவும் மறுக்க முடியாதபடியும் அழகாக எழுதியிருந்தார். அதோடு அப்பொழுது போப் பாண் டவராக இருந்த எட்டாவது அர்பண் 41