பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

காட்டுப்பேரறிஞர் ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் கூறி ர்ை. இந்த உண்மையை ஆங்கிலக் கவிஞர்தாம்ஸன்,

“இங்கே புஷ்பத்தை அசைத்தாலும் அங்கே கட்சத்திரத்தைப் பாதிக்கும்’ என்று அழகாகக் கூறுகிரு.ர்.

இந்தப் பெரியசக்தி அயர்ந்து துரங்குவதே கிடையாது. சதாகாலமும் வேலை செய்துகொண்டே யிருக்கிறது. அதுமட்டுமன்று. அதை எங்கவிதக் திலும் பாதிக்கவும் முடியாது. அதைத் துல்லியமாக அளந்து கூறமுடியும். ஆயினும் அதன் காரணத்தை இன்னும் யாராலும் அறிய முடியவில்லை. இருபத்து நான்கு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. எது சரி என்று கூற முடியாமல் அறிஞர்கள் திகைக்கின்றார்கள். ஆல்ை அணுவின் அமைப்பு சம்பந்தமான விஷயங்கள் அறியப்படும் பொழுது தான் ஆகர்ஷண சக்தியின் காரணம் அறியப் படலாம் என்று எண்ணுகிருரர்கள்.

இந்த விதமாக கியூட்டன் ஆகர்ஷண சக்தி விஷயத்தைக் கண்டபின், பி ப ஞ் ச க் தி ல் ‘அசைவு’ என்பதும் ‘அயர்வு’ என்பதும் உண் டாவதன் காரணத்தையும் அவை நிகழ்வதற்கான விதிகளையும் ஆராய்ந்து இறுதியில் மூன்று உண்மை களே வெளியிட்டார். அவை கியூட்டன் கண்ட அசைவுத் தத்துவங்கள் என்று பெயர் பெறும். அவைதான் உலகில் அசையும் வஸ்துக்கள் சம்பந்த மான விஞ்ஞான சாஸ்திரங்களுக்கும் சிற்ப சாஸ் திரங்களுக்கும் அஸ்திவாரமாகும். 56