பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

முன்னுாறு வருஷங்களுக்கு முன் முதலாவது -சார்ல்ஸ் என்னும் அரசன் இங்கிலாந்து தேசத்தில் அரசாண்டுகொண்டிருந்தான். அவனுடைய அர சாட்சியை ஜனங்கள் எல்லோரும் வெறுத்தார் கள். அந்த வெறுப்பு நாளுக்குநாள் அதிகமாய் வளர்ந்துவந்து கடைசியில் 1642-ம் வருஷத்தில் அரசனுக்கும் குடிகளுக்குமிடையில் போர் ஆரம்ப மாயிற்று.

ஒரு நாள் எட்ஜ்ஹறில் என்னுமிடத்தில் உக்கிர மான யுத்தம் கடந்தது. அப்பொழுது அரசன் தன்னுடன் வந்திருந்த கன்னுடைய இரண்டு குமா ார்களையும் பார்த்துக்கொள்ளும்படி தம் வைத்திய ரிடம் ஒப்படைத்துவிட்டு யுத்தகளத் துக்குச் சென் ருன். அங்க வைத்தியர் அரசகுமாரர்கள் இருவ ாையும் யுத்தகளத்திற்கு அருகிலிருந்த ஒரு தோட் டத்திற்கு அழைத்துக்கொண்டுபோய் அவர்களே விளையாடச் சொல்லிவிட்டுத், தாம் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தம்முடைய சட்டைப்பையிலிருந்து ஒரு வைத்திய நூலே எடுத்து வாசித்துக்கொண் டிருந்தார். அப்படி வாசித்துக்கொண்டிருந்த பொழுது அவருக்குச் சமீபத்திலேயே பீரங்கிக் குண்டு ஒன்று வந்து விழுந்து மண்ணேவாரி இறைத் தது. அவர் உடனே அரசகுமாரர்களே அந்த இடத்திலிருந்து வேறு பத்திரமான இடத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். 28