பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

யாயெ பாதுவா சர்வகலாசாலைக்குச் சென்று வெஸாலியஸ் ஸ்தானத்தில் ஆசிரியராயிருந்த பெப் | தியஸ் என்னும் அறிஞரிடம் கல்விபயின் ருரர். அர்த ஆசிரியர் அனேகவிதமான ஆராய்ச்சிகள் செய்தார். அவர்தான் ரத்தக் குழாயில் தசைக் கதவுகள் இருப்பதாக முதன் முதல் கூறியவர். அங் த விஷயத்தைத் தமது மாணவர்க்குக் கூறிய போதிலும், அந்தக் கதவுகள் அமைந்துள்ள காரணத்தை அறியாதிருந்து விட்டார். அங்தக் காரணத்தை அறியக் கொடுத்து வைத்தவர் அவ ருடைய ஆங்கில மாணவர் ஹார்விதான்.

ஹார்வி அங்கே பாதுவாவில் வைத்திய கிபு னர் பட்டம் பெற்றபின் தமது இங்கிலாந்து தேசத்துக்குத் திரும்பிவந்து காம்பிரிட்ஜ் சர்வ. கலாசாலையிலும் அங்தப் பட்டத்தைப் பெற்றார். அதன் பின் லண்டனில் வைத்தியத் தொழில் டார்க்க ஆரம்பித்தார்.

அப்பொழுது எ லி ஸ .ெ பத் மகாராணிக்கு வைத்தியராயிருந்த ப்ரெளண் என்பவருடைய குமாரி எலிஸபெத் அம்மையாரைத் தமது வாழ்க் கைத் துனேவியாக ஆக்கிக்கொண்டார். அது அவ ருக்குச் சர்வகலாசாலையில் இடம்பெறுவதற்கு அனு கூலமாயிருந்தது. அத்துடன் 1609-ம் வருஷத்தில் பார்த்தலோமியோ வைத்தியசாலையில் வைத்திய ராக நியமனம் பெற்றாரர். அந்த நியமனத்தால் அதிக ஊதியம் கிடைக்காவிடிலும், அது அவருக்கு ஆராய்ச்சி செய்ய நல்ல சக்தர்ப்பம் அளித்தது.

81