பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அவர் பாதுவா நகரத்தில் மாணவராயிருந்த பொழுது அவருடைய ஆசிரியர் பெப்ரீஷியஸ் கறுத்த ரத்தக் குழாயில் தசைக் கதவுகள் இருப்ப தாகக் கூறிய விஷயம் அவருடைய மனத்தைவிட்டு அகலவேயில்லை. அன்று முதல் அவருடைய மனம் ரத்த ஓட்ட விஷயத்திலேயே ஆழ்ந்துபோயிருங் தது. ஆயிரத்து ஐ.நாறு வருஷகாலமாக ஐரோப் பிய வைத்தியர்களுடைய அனுஷ்டானத்திலிருந்த சித்தாந்தம் தவறுடையது என்று உணர்க் தார். அதனுல் அதன் உண்மையை அறிய அல் லும் பகலும் இடைவிடாது ஆராய்ச்சி செய்து வந்தார். அதற்காகத் தாம் வைத்தியத் தொழில் பார்க்கும்போது மனிதர்களுடைய உடம்பிலுள்ள ரத்தக் குழாய்களைக் கவனித்து வந்ததோடு பாம்பு, தவளை, முயல் முதலிய ஜக்துக்களை அறுத்தும் பார்த்துக்கொண்டு வந்தார்.

ஆயிரக் கணக்கான வருஷங்களாக அறிஞர் கள் ரத்தம் எங்கே உண்டாகிறது, எப்படி ஒடு கிறது என்ற விஷயங்களைப்பற்றி ஆராய்ந்து வந்த போதிலும் அவற்றைப்பற்றிய உண்மைகளைச் சரி யாக அறியாமலே இருந்து வந்தார்கள். # இரண்டாயிரம் வருஷங்கட்குப்பின் கிரீஸ் கக ரத்திலிருந்த பேரறிஞர் அரிஸ்டாட்டில் ரத்தமா னது ஈரலில் உண்டாக்கப்பட்டு இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து சுவாசப்பைகள் வழியாக உடம்பு முழுவதும் பரவி அதல்ை உறிஞ்சப்பட்டு விடுகின்றது என்று கூறினர்.

82