பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

2. இருதயத்துக்கு வருகிறது. அதில் இரண்டு அறைகள் உண்டு. அவற்றில் இரண்டுவிதமான ாத்தம் காணப்படுகிறது.

3. அவை வேறு வேறு குழாய்கள் மூலம் உடம்பு முழுவதும் சென்று ஊறிவிடுகின்றது.

இந்த மூன்று கொள்கைகளும் சரிதான என்று ஹார்வி ஆராயலானர். ஈரலிலிருந்து கிளம்பும் ாத்தக்குழாயில் காணப்படும் ரத்தத்தின் அளவு, இருதயத்திலிருந்து கிளம்பும் ரத்தக் குழாயில் காணப்படும் ரக் கத்தின் அளவுக்குக் குறைந்திருப் பதைக் கண்டு ரத்தம் உற்பத்தியாவது ஈரலில் அன்று என்று முதலில் நிர்ணயம் செய்தார்.

இருதயம் சதா காலமும் சுருங்கிக்கொண்டும் விரிந்துகொண்டும் இருப்பதைக் கண்டார். அப்படி அது சுருங்குவதால்தான் இரத்தமானது உடல் முழுவதும் செல்கிறது என்றும், அது சுருங்கிக் கொண்டும் விரிச்து கொண்டுமிருப்பதால்தான் நாடியில் துடிப்புக் காணப்படுகிறது என்றும் அறிந்தார்.

அதன்பின் பெப்ரீஷியஸ் கறுப்பு ரத்தக் குழா யில் தசைக் கதவுகள் இருப்பதாகக் கூறியதை ஆராயலானர். அதன் பயகை அவர் கூறியபடி தசைக்கதவுகள் இருப்பதைக் கண்டார். அதுமட்டு மன்று அந்தக் கதவுகள் எல்லாம் இருதயத்தை நோக்கியே திறந்திருப்பதால் ர க் த ம் அங்கக் குழாய்களில் இருதயத்தை நோக்கிச் செல்ல முடியுமேயன்றி இருதயத்திலிருந்து உடம்பின் 84