பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

மாக உபயோகிக்கின்றது என்பன போன்ற ஆரோக்கிய ஆதாரமான விஷயங்கள் எல்லாம் அறிய முடிந்தவைகள் ஆயின.

இவ்வளவு அருமையான விஷயத்தை அறிந்து கொண்டபோதிலும், ஹார்வி அதை உடனேயே உலகத்தார்க்குக் கூற முற்பட்டு விடவில்லை.

அதற்கு என்ன என்ன ஆட்சேபனைகள் கூறமுடியுமோ அவற்றை எல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து அவைகளே எழாதபடி செய்தார். அப் பொழுதும் நூல் எழுதி வெளியிடாமல் ராஜதானி வைத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே கூறினர். அதல்ை அவர் கண்டு கூறிய புது விஷயத்தை அறிஞர்கள் யாரும் பொருட்படுத்தா மல் இருந்துவிட்டார்கள்.

ஆனல் அப்படி மாணவர்களுக்குக் கூறி பன் கணிரண்டுவருவதங்கள் கழிந்த பின் 1628-ம் வருஷத் தில் நூல் எழுதி வெளியிட்டதும் வைத்திய வட்டா ாங்களில் பெரியதோர் பரபரப்பு உண்டாக ஆரம் பித்தது. அரிஸ்டாட்டில் காலமுதல் அங்கீகரிக்கப் பட்டுள்ள ஒரு விஷயத்தைத் தவறு என்று யாரே அனும் கூறினால், ஆமாம் என்று உடனே ஒத்துக் கொள்ள முடியுமோ ? சாதாரண ஜனங்கள் அவ ருக்குப் பைத்தியம் பிடித் திருப்பதாக எண்ணினர் கள். சகோதர வைத்தியர்கள் அவருடைய கூற் றைப் பலமாக எதிர்த்தார்கள். அதனல் ஜனங்கள் அவரிடம் வைத்தியம் செய்துகொள்ள வருவது குறைந்து விட்டது. அவர் வருமானக் குறையால் கவுத்டபபடலானா. 88