பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

இந்த மாதிரிக் கஷ்டங்கள் பல ஏற்பட்டபோதி லும் அவர் ஆக்ஸ்போர்டில் இருந்த சமயத்தை இம்மியளவுகூட வீணுக்காமல் ‘உயிர் உற்பத்தி’ விஷயமாகப் பல ஆராய்ச்சிகள் கடத்திவந்தார். அவர் சிறிய விஷயம் என்று எதையும் அலட்சிய மாக எண்ணமாட்டார். ஒருநாள் அவர் அவசர மாக ஒரு ஆசிரியர் வீட்டுக்குச் சென்று அவருடைய தோட்டத்தில் பெட்டைக்கோழி அடைகாத்துக் கொண்டிருக்க முட்டையை உடைத்து அதனுள் உயிர் எ ப் ப டி உற்பத்தியாகிறது என்பதைக் குறித்து ஆராயலானர். அந்தக் காலத்தில் துண் னிய பொருள்களைப் பெரிதாகக் காட்டும் பூதக் கண்ணுடியை கலிலியோ கண்டுபிடித்திருந்தபோதி லும் வைத்தியர்களுடைய கையில் வந்து சேர வில்லை. அதுமட்டும் ஹார்வியின் கைக்கு வந்து எட்டியிருக்குமானல் அவர் எத்தனையோ புதிய விஷயங்களைக் கண்டு பிடித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அவர் ரத்தமானது இருதயத்தின் இடதுபையி விருந்து சிவப்பு ரத்தக்குழாய் வழியாக உடம்பின் சகல பாகங்களுக்கும் செல்லுகிறது என்.றம், அது திரும்பி கறுப்பு ரத்தக்குழாய் வழியாக இருதயத் தின் வலதுபைக்குச் செல்கிறது என்று கூறினர்; ஆல்ை உடம்பை அறுத்துப் பார்த்தால் சிவப்பு ாத் தக் குழாயும் கறுப்பு ரத்தக்குழாயும் இணைக்கப் பட்டிருப்பதாகக் காணப்படவில்லையே. அப்படி யிருக்க சிவப்பு ரத்தக் குழாயில் வக்த ரத்தம்தான் So 2