உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


இந்த பரிதாபக் காட்சி, ஊராரிடையே ஒரு அனுதாபத்தை உண்டு பண்ணியதால் டாக்டர் பால் எர்லிக்கை ஒரு மனிதனாகவே மதிக்காமல் கண்டபடி பேசினார்கள்.

டாக்டர் பால் எர்லிக்கும் மனிதர்தானே! அவருக்கும் இரக்க மனோபாவம் இருக்கும் அல்லவா?

அவர், தனது குடும்பத்தின் கோரச் சம்பவங்களைக் கண்டார்.

மனைவியின் முகத்தைப் பார்த்து மனம் நொந்தார். வருவோர் போவோர் அவரைப் பாடி வரும் அனுதாப வசைகளைக் கேட்டார். அனைத்தையும் எண்ணி கண்ணீர் விட்டபடியே வாழ்ந்தார்.

'கிருமிகளை அழிக்கும் சாயப் பொருட்கள் உண்டு' என்ற அவரது ஆராய்ச்சியை, எந்த ஆராய்ச்சியாளரும் ஆதரிக்கவில்லை-ஏற்கவில்லை.

'அதற்கு மாறாக, சாயம் போடுவதை ஒழுங்காகத் துணிகளுக்குப் போட்டாலே, அவர் குடும்பம் வறுமையின்றி வாழுமே' என்று ஒரு டாக்டரை, மருத்துவ மேதையைப் பார்த்து சிலர் கூறியதைக் கேட்டு எர்லிக் வேதனைப் பட்டார்.

'உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எனது குடும்பத்துக்கு உபத்திரவத்தைத் தந்து எனது மனைவியின் வயிற்றெரிச்சலை அதிகப் படுத்தாதீர்கள்', என்று கேலி செய்வோரை அவர் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொண்டார். எர்லிக் ஆராய்ச்சியில் அன்றாடம் அவருக்கு புதிய புதிய சூழ்நிலைகளே தோன்றின.