பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

105


அதனால், அவரை வம்புக்கு இழுப்போரிடம் அவர் எந்தவித வாதப் பிரதிவாதங்களை புரிந்திட விரும்ப வில்லை!

முன்பு எல்லாம் விட, இப்போது அதிக நேரமாக ஆராய்ச்சியிலே ஈடுபட்டார். உணவை வெறுத்தார். உறக்கத்தை உதறினார் உற்றார் உறவினர் அனைவரையும் மறந்தார்.

ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சி, என்பதிலேயே ஆண்டுகளை உருட்டிக் கொண்டிருந்தார் கொஞ்சமும் ஊக்கம் தளராத டாக்டர்.

உண்ண உணவே கிடைக்காதவருக்கு, பூச்சிகளுக்கு உணவளிக்க மட்டும் பணம் வேண்டாமா?

அந்த ஒரு உதவியை மட்டும் அவருக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் சாயத் தொழில் முதலாளி - தவறாமல் செய்து வந்தார்.

எவ்வளவு சாய வகைகள் தேவையோ-அவ்வளவையும் அந்த முதலாளி மனம் சலியாமல் அவருக்குக் கொடுத்து உதவினார் - அதுவும் எவருக்கும் தெரியாமல்!

கொடுப்பதையும் கெடுக்கின்ற அழுக்காறுகள் வாழ்கின்ற உலகமல்லவா? மறவாமல் பிறன்கேடு சூழ்வதைக் கச்சைக் கட்டி காரியம் ஆற்றும் ஆத்துமாக்கள் நடமாடும் காலம் அல்லவா? அதனால், முதலாளி ஒருவர், ஒரு காசு வாங்காமலும் தாம் செய்யும் உதவிகளை ஒருவருக்கும் தெரியாமல் செய்து வந்தார்.

அந்த முதலாளி தரும் இலவச சாயத்தை, டாக்டர் எர்லிக் பூச்சிகளுக்குப் போட்டுக் கொழுக்க