பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

107


என்ற சோதனையிலும், அவரது எண்ணத்திற்குரிய அறிகுறி எள் மூக்களவுகூடத் தோன்றவில்லை-என்ன செய்வார் பாவம்!

திடீரென்று ஒரு நாள்! சூறாவளிக் காற்று பேரிறைச்சலுடன் சுழன்று சுழன்று அடித்தது.

மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்தன.

குடிசைகள் எல்லாம் வானவீதியில் வலம் வந்தன. தாவரங்கள் தரையைத் தஞ்சமடைந்துப் பயனில்லை என்று, வேர்களையே இறக்கைகளாக நம்பி வேறிடங்களுக்குப் பறந்தன.

எர்லிக் வீடு மட்டும் எஞ்சி நின்றதா என்ன? சுவர்கள் எல்லாம் சடசடவென சரிந்தன. எட்டே கால் இலட்சணம் குடிபோகும் நிலைக்கு விகாரமாகி விட்டன.

பல ஆண்டுகளாக பால் எர்லிக் பாடுபட்டுத் தேடி வைத்திருந்த பூச்சிப் பெட்டிகள் எல்லாம், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.சுவர்களது இடிபாடுகளுக்கு இடையே சிக்கிப் பல பெட்டிகள் நசுங்கி உடைந்தன.

பூச்சிகள் எங்கே? தேடினார். தேடினார். பெய்த சூறாவளி மழை நீரிலே அவை சுதந்தர உயிர்களாக வீர உலா வந்தன.

காலம் எல்லாம் சிரமப்பட்டு உழைத்த உழைப்பு, கண நேரத்தில் வீணாகி விட்டதே என்று மனம் நொந்தார்-கண்ணீர் விட்டார்.

ஒரே நொடியில் ஆயிரக் கணக்கான கிருமிகளை அழிப்பேன் என்று சூளுரைத்தவரின் ஆசை, ஒரே