பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

111


அதைக் கண்டதும் அவருக்கு அளவிலா மகிழ்ச்சி! அதனால் ஓடினார்! மறுபடியும் அதே கிருமிகளைச் சேர்த்துச் சோதித்துப் பார்க்கலாம் என்றே மதகுக்கு ஒடினார்.

அவ்வாறு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க வாங்க ஒடியவரைத்தான், அந்த ஊரார் பூச்சிப் பைத்தியம் ஒடுகிறது - கிருமிக் கிறுக்கு தலைக்கு ஏறியதால் ஒடுகிறது என்று ஏகடியம் பேசினர்.

எந்த இலட்சியத்திற்காகப் பைத்தியக்காரன் என்று இந்த சமுதாயம் அவரை ஏசிற்றோ, அந்த இலட்சியம் வெற்றி பெற்று விட்டதைக் கண்ட பிறகே அவர் சோதனை அறையிலே இருந்து கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தார்.

எந்தக் குறிக்கோளுக்காகக் கிறுமிக் கிறுக்கன், பூச்சிப்பித்தன், வேலையற்ற வீணன், சோம்பேறி என்ற வசைப் பட்டங்களை மக்களிடமிருந்து பெற்றாரோ, அந்தக் குறிக்கோள் வெற்றிப் பெற்று விட்டதைக் கண்ட பிறகே வெற்றிக் களிப்பால் வீதி வழியே கூச்சலிட்டபடியே ஒடினார்.

எந்த வெற்றிக்காக அந்த சமுதாயத்தை எதிர்த்து மனைவியை மறந்து, பெற்றோரைத் துறந்து, வாடிக்கை நோயாளிகள் வருவதை மறந்து ஆராய்ச்சி செய்தாரோ, அந்த வெற்றி விடிவெள்ளியாக முளைத்த பிறகே அவர் ஓடினார். ஓடினார்! ஒடியபடியே தேடினார் ஏரிக் கிருமிகளை - மீண்டும் சோதனை செய்து பார்த்திட!

பால் எர்லிக், தான் பெற்ற வெற்றியை ஏந்திக் கொண்டு அவரது சாயமுதலாளியிடம் ஓடினார்.