பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


தனது கனவு பலித்ததற்குரிய சான்றுகளைக் காட்டி மகிழ்ந்திட!

சாய முதலாளி நம்பவில்லை எர்லிக் பேச்சை.இதுவரை அவருக்கு கொடுத்து வந்த சாயச் செலவுகள் எல்லாம் வீண் என்று நினைத்தார்.தனது குறிக்கோள் நிறைவேறாததால் மனமுடைந்து குழம்பிக் கிறுக்கனாகி விட்டார் அவர்.

டாக்டர் பால் எர்லிக் கூறுவதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு வார்த்தைக் கூட எர்லிக்கிடம் அவர் பேசவில்லை. டாக்டருக்கு சித்த பிரமை என்று முடிவு கட்டினார்.

சாய முதலாளியின் சோர்ந்த முகத்தைக் கண்ட எர்லிக் நான் பெற்ற ஆராய்ச்சியின் வெற்றியைத் தங்களிடம் கூறிட ஓடோடி வந்தேன். நீங்கள் ஊமையைப் போல் அவற்றைக் கேட்டுக் கொண்டு பதிலே ஏதும் கூறாமல் இருப்பது நியாயமா, என்று கேட்டார்.

அதற்கும் அந்த முதலாளி ஏதும் பேசவில்லை. "அமைதியாக சொல்வதையெல்லாம் சொல், கேட்டுக் கொண்டே இருக்கிறேன்" என்றார்.

"அப்படியா! என் ஆராய்ச்சி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையா? மற்றவர்கள் என்னை மதிப்பது போல நீரும் என்னைப் பைத்தியம் என்றே மதிக்கின்றீரா?" என்று கோபமாக எழுந்தார்.

ஏரியின் மதகோராம் ஒடிச் சேகரித்து வந்த கிருமிகளைப் பெட்டியோடு எடுத்து முதலாளி