பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

55





வழக்குரைஞராக விருது பெற்றாரே ஒழிய அவரது அறிவு வேட்கையெல்லாம் விஞ்ஞானத் துறையிலேயே திளைத்திருந்தது.

சுவீடன் நாட்டு விஞ்ஞான உலகிலே சிகரம் போல் விளங்கிய லினியஸ் என்பவரை லவாஸ்யே சந்தித்தார். இருவர் நட்பும் வளர்ந்தது.

அந்த அறிவு ஒளி நாளுக்கு நாள் பொலிவேறி சிறந்த விஞ்ஞான நுட்பங்களை அவனிக்கு உமிழ்ந்த வாறே ஆய்வு புரிந்தது!

பாரீஸ் நகரம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் என்ற சிறப்பை மட்டுமே பெற்றதல்ல. ! உலகிலேயே வியப்பு மிக்க அழகான நகரங்களிலே ஒன்று என்றும் நாம் படித்திருக்கின்றோம்!

எழில் தவழும் இந்த நகரத்தை, அவ்வப்போது அழகேற்றிடப் பல நேரங்களிலே பல பிரெஞ்சு மன் னர்கள் போட்டியிட்டுப் பணியாற்றி இருக்கிறார்கள்.

பாரீஸ் நகரத்தை அழகுபடுத்த, வீதிகளிலே விளக்குகளை அழகாக அமைப்பது எப்படி என்ற

திட்டத்தை, அப்போதைய பிரெஞ்சு அரசு தீட்டியது. யார் இந்த திட்டத்தை வகுத்துக் கொடுக் கிறார்களோ, அவர்கள் பிரெஞ்சு விஞ்ஞானக் கலைக் கழகத்தால் பாராட்டிப் பரிசளிக்கப் படுவார்கள் என்ற போட்டியை அந்த அரசு அறிவித்தது.

இலவாஸ்யே, அந்த அறிவுப் போட்டியிலே கலந்து கொண்டார். எப்படியெல்வாம் பாரீஸ் நகரை வண்ண வண்ண ஒளி விளக்குகளால் அழகு படுத்த லாம் என்பதற்கான வரைபடம் ஒன்றை அந்த