பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

117


“உடற்கூறு இயல் துறையில், உலகம் பயன்பெறும் ஆராய்ச்சிகளைக் கண்டு பிடிக்கச் சிந்தனை உரமற்றவர்கள் எல்லாம், என்னைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.”

விபரீதமான குற்றச் சாட்டுகளை வேண்டுமென்றே என் மீது சுமத்தி, என்னையும் - என் அறிவையும் - திறனையும் இழிவு படுத்தி வருகிறார்கள்.

நான் வாழும் ஊர் மக்களை எனக்கு எதிராகத் தூண்டிவிட்டு அவர்களைக் கொண்டே என்னைக் கொல்லச் சதி புரிகிறார்கள்.

அப்போது கூட, என் இளம் வயதே காரணமாக, நான் என்னைத் தற்காத்துக் கொள்ளக் கூட என்னால் முடியாத நிலையாக இருப்பதை நான் அறிந்தே மன்னரிடம் சரணடைகிறேன் என்று கண்ணீர் சொரிந்தபடியே வெசேலியஸ் தனது நிலையை அரசரிடம் அறிவித்தார்.

ஆண்ட்ரியஸ் வெசேலியஸ் தனது உயிருக்கு அஞ்சி ஸ்பெயின் நாட்டுக் கொற்றவனைத் தஞ்சமடைவதற்குரிய காரணம் என்ன?

வெசேலியஸ் பிறப்பதற்கு ஏறக்குறைய 1300ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, மருத்துவத் துறையில் மகத்தான செல்வாக்கை உருவாக்கி மறைந்தவர் மாமேதை கேலென் என்பவர்.

அவர் கண்டுபிடித்த சாதனைகள் எல்லாம் மருத்துவ உலகில் கொடி கட்டிப் புகழ்ச் சிகரத்தில் நம்பிக்கையோடு வானளாவப் பறந்து கொண்டிருந்தது.