பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு



கி.பி. 1543ஆம் ஆண்டில் தனது நூல்களை எழுதி முடித்தார்.

அந்த நூல்களை அவர் வெளியிட்டால், இருபத்தெட்டே,வயதுடைய ஒர் இளம் நிபுணரால், கேலன் ஆராய்ச்சிகள் எல்லாம் தவிடு பொடியாகி விடுமே, அல்லது கேலன் புகழுக்கு களங்கம் ஆகுமே என்று அஞ்சினார்கள். அதனால் வெசேலியஸ் செய்வதையெல்லாம் கண்டு பொறாமை அடைந்தார்கள். அன்றுவரை மருத்துவத் துறையில் பேராதிக்கம் செய்து வந்த கேலனின் செல்வாக்கு, சூறாவளியில் சிக்கிய கலமாகச் சுக்கு நூறாகிவிடும் என்று உணர்ந்தார்கள்.

கேலன் போன்ற மேதைகளின் கருத்துக்கள் ஒருவனின் ஆராய்ச்சி முன்பு பாறைப்பட்ட பாண்டம் போல் ஆகிவிடும் என்றால், நம் போன்றோர் கதி என்ன என்று அச்சம் கொண்டார்கள்.

அதனாலே, வெசேவியசுக்கு எதிர்ப்பாக எதிர்ப்புக் குரலை பலமாகக் கொடுத்தார்கள். அந்த எதிர்ப்பு பாடுவா நகரத்தையே துடித்து எழ வைத்தது.

“கேலெனுக்கு எதிர்ப்பா?” என்று சில படித்தவர்கள் வெசேவியசை ஒட ஓட விரட்டி அடித்தார்கள். கண்ட கண்ட இடங்களில் கலகம் செய்தார்கள்.

கல்லூரியிலே வெசேலியஸ் தானுண்டு தனது பணி உண்டு என்று இருந்தால் கூட அங்கே அவர் வேலை செய்ய முடியாதவாறு எதிர்ப்புக் காட்டினார்கள்.

தங்கியிருந்த விடுதிக்குச் சென்றால் அங்கே ஒரு கூட்டம் வரும். சோதனையைச் செய்து பார்க்கச்