பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

121



சென்றால் அங்கேயும் அடிதடி நிகழும். உணவு உண்ணும் இடத்திற்குச் சென்றால் அங்கேயும் பலத்தக் குழப்பம் ஏற்படும்.

இதன் உச்சக் கட்டம் நாளாக ஆக அதிகரித்து அவரை அச்சத்தில் ஆழ்த்தி விட்டது. எந்த நேரத்திலே என்ன நடக்குமோ என்ற பீதி அவர் நெஞ்சை உலுக்கியபடியே இருந்தது.

பாம்பைப் பிடித்து வந்து அவரது சோதனைக் கூடத்திலே எறிவார்கள். நாயைக் கொண்டு வந்து அவர் மீது ஏவி விடுவார்கள். செத்தப் பறவைகளை அவர் சோதனை செய்யும் போது வீசுவார்கள்.

ஒணான், கீரி, குரங்கு இவற்றின் அழுகிய சடலங்களை எறிந்து அவர் சோதனைச் சாலையிலே முன்கூட்டியே நாற்றத்தை பரவச் செய்வார்கள்!

அந்த மாமேதை அதைக் கண்டு அஞ்சாமல் அவற்றை எல்லாம் பொறுமையாக எடுத்துக் கொள்வார்.

ஒவ்வொன்றாக அவற்றை அறுவை செய்து, ஆராய்ச்சி நடத்தி பல புதிய உண்மைகளை கண்டறிந்தார்.

அவரது ஆய்வுக்குரிய எதிரிகள், தங்களை அறியாமலேயே அவரை உரம் போட்டு வளர்த்து வந்தார்கள்.

இந்த நேரத்தில் பாடுவா நகரத்துப் பிரமுகர்கள் எல்லாம் ஒன்று கூடி, வெசேலியஸ் எழுதிய நூல்களைப் படித்துவிட்டுக் கேலனை எதிர்ப்பவனுக்குப் பல்கலைக் கழகத்திலே வேலையில்லை என்று முடிவு