பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


விஞ்ஞானக் கலைக் கழகத்திற்கு வரைந்தனுப்பினார்.


அவரது அற்புதமான வரைபடத்தைக் கண்ட அந்தக் கழகம், அவருக்குத் தங்கப் பதக்கத்தை அளித்துப் பாராட்டியதுடன், தனது கழகத்திலே ஒர் உறுப்பினராகவும் சேர்த்துக் கொண்டு பெருமைப் படுத்தியது.

பிறக்கின்ற ஒரு குழந்தை புகழுக்கு ஏதுவான குணத்தோடு எப்படிப் பிறக்க முடியும்? தாயின் கருவிலே அந்தத் திருவைப் பெற வேண்டுமென்றால், அது, விளைகளின் பாற்பட்ட விளைவாகவல்லவா இருக்க வேண்டும் என்பர். இது, பகுத்தறிவுக்குட்பட்ட பொருத்தமான பொருளாக உள்ளதா?

எனவே, பிறக்கின்ற குழந்தை, அது சமுதாய, கால அறிவு, கல்வி நிலைகளுக்கேற்ப வளர்ந்து, தோன்றுகின்ற துறைகளிலே எல்லாம் அது புகழோடு தோன்ற வேண்டும். என்பதே அறிவுக்கு உட்பட்ட உரையாக இருக்கிறது.

அதனைப் போல லவாஸ்யே, விஞ்ஞானத் துறையிலே தோன்றி, பல்கலை வித்தகராகவும் விளங்கினார்.

இரசாயனத் துறை, வானியல் துறை, விஞ்ஞான துறை, விவசாயத் துறை, நிதியியற்றுத்துறை, பொருளியல் துறை, அரசியல் துறை, பொதுக் கல்வித்துறை, உடலியல் துறை, ஆகிய ஒன்பது துறைகளிலே எல்லாம்-அவர் எத்துறையிலே காலடி வைத்தாரோஅத்துறைகளிலே எல்லாம், அவர் தோன்றிற் புகழோடு தோன்றி விளங்கினார்.