பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

⃞ 127



அதனால் தான் அவரது மருத்துவ ஆராய்ச்சிகள் இன்றும் உயிரோடு வாழும் தகுதியைப் பெற் றுள்ளன!

நாமும் அவற்றின் பயன்களை அனுபவிக்கின்றோம்!

சட்டத்திற்கும், சமுதாயத்திற்கும், மத விரோதத்திற்கும் பயந்து, அந்த மருத்துவ வித்தகர் மனித உடலை இரவோடு இரவாக அறுத்துப் பரிசோதனை செய்யாமலிருந்திருந்தால் - மனித உடற்கூறுஇயல் - இன்று பல உண்மைகளைப் பெற்றிருக்க முடியுமா? இந்த அறிவியல் தெய்வத்தைத்தான் அன்று சில அழுக்காறு படைத்த அறிவியல் கயவர்கள், மக்களைத் தூண்டிவிட்டு கொலை செய்ய முயன்றார்கள்.

அந்த மாமேதை, அற்பர்களின் சூழ்ச்சி அகழ்களை விரட்டித் தனது ஆராய்ச்சிக் கோட்டையிலே புதிய கண்டுப்பிடிப்புக் கொடிகளை பறக்கவிட்டவாறே வானுறவே உயர்ந்தார்.

மனித உடலை அறுத்து அவர் கண்ட மருத்துவ விஞ்ஞான சாதனைகளை உலகுக்கு உணர்த்திய போது, உலகம் அவரைக் கண்டு புருவத்தை மேலேற்றிப் பார்த்தது. வெசேலியஸ் தான் கண்ட இன்பம் பிறரும் அடையவேண்டும் என்ற ஆசையால் தனது மாணவர்களையும் மனித உடலை அறுத்து சோதனை செய்து உண்மைகளை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒருவர் மனித உடலை அறுக்கும் போது அதை மற்றவர்கள் நின்று சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்ப-