பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 ⃞

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


தாலே மட்டும் உடல்கூற்று அறிவியல் வந்து விடாது.

நேருக்கு நேராக அறுவை செய்து உண்மையை உணர்த்துவது ஒன்றுதான் நல்லது என்று மருத்துவத் துறை மாணவர்களுக்குக் பால பாடம் போதித்தார்.

இன்றைக்கும்கூட மனித உடலை அறுத்து அதன் மர்மங்களைக்கண்டு நோயுற்றவர்களை குணப்படுத்தும் முறையையும் - திறனையும் நாம் பார்க்கிறோம் அல்லவா?

அந்த முறைக்கு அடிகோலியவர் மாமேதை ஆண்ட்ரியஸ் வெசேலியஸ் தான் என்பதை நாம் நினைக்கும் போது நமது இதயம் நம்மையும் அறியாமல் நெகிழ்கிறது. நன்றி நவில்கிறது.

அக்கால மருத்துவர்கள் வெசேலியசுக்கு எதிராக வதந்திகளையும் எதிர்ப்புகளையும் செய்தது ஏன்?

அவர்களின் சுயநலங்ளையெல்லாம் வெசேலியஸ் எடுத்துக் காட்டிக் கண்டித்ததே காரணமாகும்.

மருத்துவர்கள் எல்லோரும் தங்களுடைய தொழிலை நடத்தி பணம் சேகரிக்கும் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள்.

மனித இனத்துக்காக என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டுமோ! அவற்றை அச்சத்திற்கும், அரிய உழைப்பிற்கும் அஞ்சி கைவிட்டு விட்டார்கள்.

பண ஆசை, பதவிஆசை, பட்டம் பெறும் ஆசையிலே காலமெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.