பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


அந்த பெரும் குழப்பம்தான்், வெசேலியசை ஒட ஒட விரட்டியடித்தது.

பாடுவா பல்கலைக்கழகத்தின் பதவியைவிட்டே ஒட வைத்தது. வசைமாரிகளை வரம்பின்றிப் பொழிந்தது. அவரது வாணாளை நாசமாக்கியது.

வாலில்லாத குரங்குகளையும் விலங்குகளையும் அறுத்து ஆராய்ச்சி செய்து, ரோம் மருத்துவத் துறை வானிலே விடிவெள்ளியாக விளங்கிக் கொண்டிருந்த கேலனை மனித உடலிலேயே நேருக்குநேராக அறுத்துப் பார்த்து சோதனை செய்து பல உண்மைகளை கண்டுபிடித்த வெசேலியஸ், தக்கச் சான்றுகளை நிறுவி வன்மையாக எதிர்த்தார்.

உண்மை எங்கிருந்தாலும் அதை அலசி ஆராய்ந்து உலகத்துக்கு உணர்த்துவதல்லவா அறிவின் கடமை! அதைத்தான் அன்று வெசேலியஸ் உரிமையுடன் செய்தார்.

கேலனுடைய ஆராய்ச்சிகளை மட்டுமே எதிர்க்கவில்லை.மனிதகுலம் வாழ்வதற்கான ஆராய்ச்சிகளை யார் கண்டுபிடித்திருந்தாலும் சரி, அவற்றில் தவறுகளைக் கண்டால் ‘இது உண்மை - இது தவறு’ என்று பகிரங்கமாகவே எடுத்துக் காட்டினார்.

இவ்வாறு பழங்கால ரோமானிய மருத்துவத் துறையின் அடிப்படையினைக் கலகலவென ஆட்டி அசைத்து உலுக்கினார்.அதனால், 1300- ஆண்டு காலமாக, மருத்துவத் துறையின் வேதவாக்காகப் பறந்து கொண்டிருந்த கேலனுடைய புகழ்க் கொடி சற்றே தாழ ஆரம்பித்தது.